Wednesday, March 18, 2009

ஏதோ சொல்லணும் போல இருக்கு..பாகம் 3

வேலா: நீதானடி என் பொண்டாட்டி..அதான் உன்கிட்ட கேட்டேன்.
கவி: மறுபடியும் ஒரு தடவை சொல்லு
வேலா: நீதான் என் பொண்டாட்டின்னு சொன்னேன், புரியலையா...
கவி: ம்ம்ம்...பார்ப்போம் இது எத்தனை நாளைக்குன்னு..
வேலா: நான் பொய் சொல்றேன்னு நினைக்கறியா?
கவி: நான் அப்படி நினைக்கல.. ஆனா...
வேலா: நீ என்ன நினைக்கறன்னு எனக்கு புரியுது, அதை ஞாபகப்படுத்தி என்ன மூட் அவுட் பண்ணாத ப்ளீஸ்..
கவி: ம்ம்ம்... ஆனா எனக்கு ரொம்ப பயமா இருக்குடா.. நீ எங்க என்ன விட்டு சீக்கிரமே பிரிஞ்சிடுவியோன்னு தோணுது...
வேலா: ம்ம்ம்...பிரிவொன்று நேரும் என்று தெரியும் பெண்ணே என் பிரியத்தை அதனால் குறைக்க மாட்டேன்.
கவி: அப்புறம்
வேலா: எரியும் உடலென்று தெரியும் பெண்ணே என் இளமைக்கு தீயிட்டு எரிக்க மாட்டேன்.
கவி: ஹேய் வேலா..
வேலா: ம்ம்ம். சொல்லு..
கவி: ஐ லவ் யு டா...
வேலா: ஆயிரம் தடவை ஐ லவ் யு.. போதுமா... நான் கேட்டத நீ இன்னும் கொடுக்கவே இல்ல..
கவி: என்னது?
வேலா: கிஸ்
கவி: ம்ம்ப்ச்... போதுமா..
வேலா: ம்ம்ஹூம்.. போதாது..
கவி: ம்ம்ப்ச்... ம்ம்ப்ச்... ம்ம்ப்ச்...
வேலா: ம்ம்ப்ச்... ம்ம்ப்ச்... ம்ம்ப்ச்... ம்ம்ப்ச்...
கவி: புதுசா பொறந்த மாதிரி இருக்கு..
வேலா: எனக்கும்...ஆமா டைம் என்ன, எனக்கு தூக்கமா வருது..
கவி: தூங்கதடா.. இப்பதான் டைம் மூணு மணி ஆகுது..
வேலா: உன்ன அப்படியே கட்டி புடிச்சு...
கவி: கட்டி புடிச்சு...
வேலா: தலையில இருந்து கால் வரைக்கும்...
கவி: உனக்கு தூக்கம் வருதுன்னு சொன்ன இல்ல.. போய் தூங்கு போ..
வேலா: நீ எப்பவுமே இப்படிதான்.. நல்ல மூட் வரும்போதுதான் பேச மாட்ட..
கவி: ம்ம்ம்ம்ம்....குட் நைட் டா...
வேலா: குட் நைட் செல்லம்...பாய்..

ஒருவழியாக முடிந்த செல்போன் உரையாடலை தொடர்ந்து தூங்கலாமென்று எண்ணிய வேலனுக்கு சுத்தமாக தூக்கமே வரவில்லை. ஏதோ ஒரு புரிந்துகொள்ள முடியாத மனநிலை அவனை முழுவதுமாக ஆட்கொண்டிருந்தது. அது சந்தோஷமும் இல்லாமல் அல்லது மன அழுத்தமும் இல்லாமல் ஒரு புதுவிதமான, இதுவரை அவன் அறிந்திராத ஒரு மனநிலையாகும். அவனது ஐம்புலன்களும் கவியினுடைய பார்வைக்கும் அல்லது அவளது பேச்சிற்க்கும் கட்டுண்டு இருப்பதை போல உணர்ந்தான்.

யாரிவள், எனக்கும் இவளுக்கும் என்ன தொடர்பு, ஏதாவது பூர்வஜென்ம பந்தத்தின் நீட்சியா அல்லது எனக்காகவே அந்த கடவுளால் உருவாக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டவளா என வழக்கமாக காதலில் விழுந்த என் நண்பர்கள் புலம்பும்போது அல்லது உளரும்போது நான் அவர்களை பரிகாசம் செய்தது நினைவிற்கு வந்தது.
ஆஹா... இத்தனை நாள் அவர்களை முட்டாள்கள் என எண்ணிய நான் எத்தனை பெரிய முட்டாள் என வேலன் எண்ண தொடங்கினான்.
ச்சே... எப்படி புரண்டு படுத்தாலும் இந்த பாழா போன தூக்கம் மட்டும் வரவே மாட்டேங்குதே.. நான் ஏன் இவளை பத்தி மட்டுமே நினைச்சிக்கிட்டிருக்கேன்..
என்னை தவிர இந்த உலகத்துல எல்லா ஜீவராசிகளும் தூங்கிக்கொன்டிருககிறதே என வேலன் தனக்குள் புலம்பிக்கொண்டிருந்தான்.

அவனது மூளை இவளை தவிர வேறு எதனை பற்றியும் சிந்திக்க மறுத்திருந்தது. அவன் இது வரை யாரெல்லாம் முக்கியம் என நினைத்திருந்தானோ அவர்களையெல்லாம் கவி அனாவசியமாக முந்திக்கொண்டு முதலிடத்தில் வந்துவிட்டிருந்தாள். ஒவ்வொரு இரத்த அணுக்களிலும், செல்களிலும் அவளே நிறைந்திருப்பதாக ஒரு உணர்வு. அவளை தவிர இந்த உலகத்தில் எதுவுமே அவனுக்கு முக்கியமாக படவில்லை. இந்த அளவிற்கான வேதிமாற்றத்தை அவனது உள்ளத்தில் நிகழ்த்தியது எது. அவளது அழகா? நாம்தான் பல அழகான பெண்களை கடந்திருக்கிறோமே, அவர்களெல்லாம் நம்மை ஆட்கொள்ளவில்லையே.. அவர்கள் மீது குறைந்த பட்ச அன்பு கூட வரவில்லையே.. இவளிடம் மட்டும் எப்படி நான் முழுவதுமாக சரணடைந்தேன்.

ஐயோ நான் ஏன் இவள பத்தி மட்டுமே யோசிச்சிட்டு இருக்கேன்.. நானும் காதல் பைத்தியமாகிட்டேனா... இருக்கட்டுமே..


"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்ட
அழகுக்காகவே
நான் பைத்தியமாகலாமடி...!!

இப்படியான எண்ண ஓட்டங்களின் பெருங்க்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த வேலன் கொஞ்சம் போராட்டத்திற்கு பின் அவனையும் அறியாமல் தூங்கியும் போனான். கவியின் நினைவு குதிரைகளும் சற்றே ஒய்வு கொள்ள தொடங்கியிருந்தது அடுத்த நீண்ட பிரயாணத்திற்கு தயாராவதற்காக...

(தொடரும்)