Tuesday, March 3, 2009

ஏதோ சொல்லணும் போல இருக்கு..பாகம் 2

ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்த நான் கொஞ்சம் கொஞ்சமாக என்னுடைய சுய நினைவுக்கு திரும்பிக்கொண்டிருந்தேன். ஆஹா ரொம்ப நேரம் ஆகிவிட்டது என நினைவுபடுத்தியது அப்பாவின் செல் போன் அழைப்பு. வீட்டிற்கு வந்து சீக்கிரமாக இரவு உணவை முடித்துவிட்டு எனது அறைக்குள் சென்றதும் கவியிடமிருந்து அழைப்பு வந்தது.

கவி: வீட்டுக்கு வந்துட்டியாடா, மழையில மாட்டிக்கிட்டியா என்ன?...
வேலா: மழையிலெல்லாம் மாட்டல, உன்கிட்டதான் வசமா மாட்டிக்கிட்டேன்.. இனி என் வாழ்க்கையிலே நிம்மதியே இருக்கப்போரதில்ல..
கவி: ஏன் அப்படி சொல்லுற?
வேலா: உன்ன இனிமே என்னால இந்த ஜென்மத்துல மறக்க முடியாது கவி..
கவி: என்னாலயுந்தாண்டா... வேலா, என்ன உனக்கு புடிச்சிருக்காடா...
வேலா: என்ன உளர்ற..நீ என் உயிர்டி..
கவி: அது இல்ல, என் முகமே ஞாபகம் இல்லன்னு சொன்னே, இப்ப நான் பாக்க எப்படிடா இருக்கேன், என்ன உனக்கு உண்மையிலேயே பிடிச்சிருக்கா சொல்லு...
வேலா: நான் கவியதான் லவ் பண்றேன்.. கவியோட உடம்ப இல்ல.. புரிஞ்சுதா.. நீ எப்படி இருந்தாலும் என் செல்லகுட்டிதான்..
கவி: (மௌனம்)
வேலா: ஏய்.. என்ன ஆச்சு..
கவி: ஒன்னும் இல்லடா.. எனக்கு பேச்சு வரல..வேலா..வேலா...
வேலா: ம்ம்.. சொல்லு...
கவி: ஐ லவ் யு டா...
வேலா: மீ டூ குட்டி..
கவி: நீ ஏன் ரயில் உள்ள வரல.. நான் என் லக்கேஜ வச்சிட்டு உடனே திரும்பி கதவு பக்கம் வந்தேன்.. நீ மட்டும் அங்க இருந்திருந்தா உன்ன அப்படியே கட்டிபுடிச்சி முத்தம் கொடுத்திருப்பேன்..
வேலா: அங்க நிறைய பேர் இருந்திருந்தாங்க..
கவி: யார் இருந்தா என்ன, நான் நிச்சயம் கொடுத்திருப்பேன்..
வேலா: அம்மா என்ன பண்றாங்க?
கவி: அவங்க படுத்து தூங்கறாங்க... நான் என் பெர்த்ல இருக்கேன்.. ஏசி கம்பார்ட்மென்ட் என்பதால் எந்த இரைச்சலும் இல்ல..
வேலா: ஹேய் கவி, இன்னிக்கி எனக்கு எவ்வளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா..
கவி: எவ்வளவு சந்தோஷமா இருக்கு?
வேலா: எனக்கு சொல்ல தெரியல, உன்ன இன்னிக்கி ரொம்ப நாளைக்கு அப்புறம் பார்த்தப்போ, எனக்கு அப்படியே இதயமே நின்னு போச்சு.. நீ எவ்வளோ அழகா இருந்த தெரியுமா..
கவி: என்ன புடவையில பார்த்தின்னா நீ மயக்கம் போட்டு கீழ விழுந்துடுவேன்னு நினைக்கிறேன்..
வேலா: அதுவும் இல்லாம பார்த்தேன்னா ஒருவேளை மயக்கம் போட்டு விழுந்துடுவேன்..
கவி: அய்யே.... சீ போடா...
வேலா: நீ ஏன் கவி என் வாழ்க்கையில வந்தே? அதுவும் இவ்வளவு நாள் கழிச்சு? வேட்டையாடு விளையாடு படத்துல கமல் சொல்லுறாப்போல "எத்தனையோ காலம் தள்ளி நெஞ்சோரம் பனித்துளி"..
கவி: வேலா.. நீ எனக்கு கிடைப்பியா? கிடைக்கமாட்டியா? சொல்லு..
வேலா: நான் உனக்கு கிடைப்பேன், நீதான் எனக்கு கிடைக்க மாட்ட..
கவி: புரியல..
வேலா: போக போக புரியும்..
கவி: டேய்.. ஒரு நிமிஷம்.. அம்மா பாக்குறாங்க... நான் அப்புறம் கூப்புடறேன்.. தூங்கிடாதே..
வேலா: சரி, எனக்கும் பாத்ரூம் போகணும்...

மணி சரியாக நடு இரவு பன்னிரண்டு ஆகி அரை மணி நேரம் முடிந்துவிட்டது..

கவி மீண்டும் அழைக்க..

கவி: என்னடா தூங்கிட்டியா..
வேலா: இல்லப்பா.. நான் உன்ன நினைச்சி..
கவி: என்ன நினைச்சி...
வேலா: ஒன்னும் இல்ல விடு..
கவி: இப்போ சொல்லலேன்னா நான் உன்கூட பேசவே மாட்டேன் தெரிஞ்சுக்கோ..
வேலா: இதையே சொல்லியே என்ன மிரட்டிடுற..
கவி: சொல்லு...
வேலா: மூன்றாம் பிறை படத்துல இருக்குற கண்ணே கலைமானே பாட்டுல ஒரு வரி வரும், அதை நினைச்சு பார்த்தேன்... எனக்கு கண்ணெல்லாம் கலங்கிடுச்சு...
கவி: என்ன வரி அது..
வேலா: "உனக்கே உயிரானேன், எந்நாளும் எனை நீ மறவாதே" அந்த வரிதான்... என்ன மறந்துடுவியா கவி..
கவி: இந்த ரயில்ல இருந்து குதிச்சிட்டா நீ என்ன நம்புவியா வேலா...
வேலா: ஏன் இப்படி பேசுற..
கவி: பின்ன என்ன, நீ மட்டும் ஏன் என்ன ஹர்ட் பண்றமாதிரி பேசுற..
வேலா: சரி இனிமே பேசமாட்டேன்.. ஆனா நீ இன்னும் என் கேள்விக்கு பதில் சொல்லவே இல்ல..
கவி: என்ன கேள்வி?
வேலா: என்ன மறந்துடிவியான்னு கேட்டேன்..
கவி: சத்தியமா மறக்க மாட்டேன்..
வேலா: (ஒரு பெருமூச்சு)
கவி: ஹேய், நம்ம ரெண்டு பேரோட கெமிஸ்ட்ரி சூப்பரா இருந்துச்சிடா..
வேலா: அப்படியா.. அப்படியே பிசிக்சும் சூப்பரா இருந்தா நல்ல இருக்கும்..
கவி:ம்ம்...
வேலா: ம்ம்ம்ம்ம்....
கவி: ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....
வேலா: ம்ம்ம்ம்ம்....
கவி: ஏய், உனக்கு என்ன ப்ளட் க்ரூப்டா..
வேலா: ஒ பாசிடிவ்
கவி: எனக்கும் ஒ பாசிடிவ் தான்..
வேலா: ஒ க்ரேட்..
கவி: நம்ம ரெண்டு பெரும் கொஞ்சம் ப்ளட் எக்சேஞ் பண்ணிக்குவோமா...
வேலா: எதுக்கு...
கவி: உன் ரத்தம் என் உடம்புல ஓடனும்டா...
வேலா: முடியல... சத்தியமா சொல்றேன் கவி... நீ சொன்னினா நான் அப்பவே செத்துடுவேன்.. நான் பொய் சொல்லல... நான் உன்கிட்ட இருந்து எதையுமே எதிர்பாக்கல.. எதையுமே.. நீ கொஞ்சம் கொஞ்சமா என் ரத்த்திலியே கலந்துட்டே..நான் உள்ளர்றேன்னு நினைக்கிறேன்... எனக்கு இப்போ அலங்காரமா பேச தெரியல..ஐ லவ் யூடி.. ஐ லவ் யு...ஐ லவ் யு...ஐ லவ் யு... ஐ லவ் யு... ஐ லவ் யு...ஐ லவ் யு...
கவி: நிச்சயமா நம்ம லவ்வ இந்த உலகத்துல யாருமே புரிஞ்சிக்க போறதில்ல...
வேலா: உனக்கு புரிஞ்சா போதும்... ஹேய் கவி, எனக்கு ஒரு கிஸ் கொடேன்..
கவி: அதை நீ போய் உன் பொண்டாட்டிகிட்ட கேளு..

(தொடரும்)

2 comments:

  1. Getting interesting.. :) Hope u too in love.. ;)

    ReplyDelete
  2. hi bala really superb:):)!!!keep it up....All the best

    ReplyDelete